நாள் 1 (03.11.2023)
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாள் 2 (04.11.2023)
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Day 3 (05.11.2023)
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையோ, இடியுடன் கூடிய மிதமான மழையோ பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Day 4 (06.11.2023)
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் மதுரை ,நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..
Day 6 (07.11.2023)
தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25°C ஆகவும் இருக்கும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.லேசான/மிதமான மழை
சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°C ஆகவும் இருக்கும்